பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

15

பலவேசம் பிள்ளை அதிகாலையிலேயே எழுந்து விடும் பழக்கமுடைய வர். எழுந்ததும் பல்துலக்கி, குளித்து, பூஜை முடிக்குமுன் காப்பி கூட ச் சாப்பிட மாட்டார். அவருடைய நலனை யும், தேவைகளையும் உணர்ந்து பணிவிடை செய்ய; அந்த பங்களாவில் விசுவாசமுள்ள ஊழி யர்கள் இருந்தனர்.

ஆயினும், கூடுமானவரை அவர் தன்னு டைய பணிகளையெல்லாம், தாமேதான் செய்து கொள்ளுவார்.

பூஜையை முடித்துவிட்டு வெளியே வந்ததும், சமையல் கார சாமிநாதன் மிகுந்த பணிவோடு பலவேசம் பிள்ளை வழக்கமாக உட்காரும் சாய்வு நாற்காலிக்கு அருகில் உள்ள ஸ்டுடில் காப்பியை வைத்து விட்டுச் சென்றான்.

காபியைக் குடித்து விட்டு, அன்றைய தினசரி

யைப் புரட்டிக் கொண்டிருந்த பலவேசம் பிள்ளை,

குைப்பிடறேனுங்க எஜமான்,’’ என்கிற பழக்க மான குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தார்:

  • யாரது... பூவாயியா? வா... வா. ஏது இவ்வளவு தூரம், காலங் காத்தாலேயே!’’ என்று ஆச்சர்யத்துடன் வினவியபடியே, தம் அருகில் இருந்த தட்டிலிருந்து இரண்டு ஆரஞ்சுப் பழங் களை எடுத்து, 'இந்தா... சுவாமி பிரசாதம் வாங்