18
18
- ஆமாம். சும்மா இருக்காமே, நானாக என்ன செய்ய முடியும்? கட்டின புருஷன் இப்படித் தறி கெட்டு அலையறான்னா; அதுக்கெல்லாம் உன்னைப் போல பெண்கள் தானே பொறுப்பு.??
பூவாயி பதறிப் போனாள். 'என்னங்க எஜமான்; ஒரேமுட்டாப் பழியை என் தலைமேலே போட்டுட்டீங்க. நீங்க சம்பளம் கொடுக்கிற முதலாளி. உங்க கீழே வேலை செய்யறவங்களை நீங்க சொல்லித் திருத்தக் கூடாதுங்களா??’ என் தாள.
உடனே பலவேசம்பிள்ளை, 'இதோ பாரு பூவாயி; நான் சம்பளம் கொடுக்கற முத லாளின்ன; அவங்க வேலை வரைக்கும்தான். அதுக்கும் மேலே, அவங்க சொந்த விஷயத்திலே நான் ஒரளவுக்கு மேலே தலையிட்டேன்னா; நாலு தரம் கேப்பாங்க. அப்புறமும் கேக்கல் லேன்னா என் மரியாதை போயிடும். குடிகாரன் காதிலே, நல்லதைக் கரடியாக் கத்தினாலும் ஏறாது. பக்கம் பக்கமா குடிக்கறது கெடுதல்னு’ எழுதினாலும், அதைப் புரட்டிக் கூட பார்க்க மாட் டான். இதினாலே எல்லாம் ஒரு பிரயோஜனமும் இல்லேன் னு, காந்திஜி பச்சையாகவே சொல்லிப் பிட்டாரு; புரிஞ்சுதா?’ என்றார்.
பூவாயி பரிதாபமான குரலில், அப்போ,
நெதக்கும், இப்படிக் குடிகாரப் புருஷன்மாரு ட்டே நாங்க அடிபட்டுச் சாக வேண்டியது