பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

21

ஆறுமுகம் தயங்கினான். அவன் முகம் மிகவும் வாட்டமடைந்திருந்தது. தலையைச் சொரிந்தபடி, 'மானேஜரய்யாவை வழியிலே பார்த்தேன். என்னமோ தெரியாமத் தப்புப் பண்ணிட்டேன். இந்த ஒரு வாட்டி மன்னிச்சுப் புடுங்க எஜமான். எல்லாம், இந்த மன்னாராலே வந்தது...”*

'ஏண்டா ஆறுமுகம்; இதுதானேடா உங்க பொழப்பு எந்த லோகத்திலே இருக்கோம்கறதே புரியாமே, தலைகால் தெரியாமே அட்டகாசமாகத் தப்பும் தண்டாவும் பண்ண வேண்டியது. போதை தெளிஞ்சதும், கால்லே வந்து விழுந்துட வேண்டி யது. குடிகாரன் பொழப்பு இது தானேடா! கள்ளுக் கடையை மூடினா; வார்னிஷ் கடைக்குப் போய் நிக்கறிங்க. அவன் கலக்கிக் குடுக்கறதை வாங்கிக் குடிச்சிட்டு, குடல் வெந்து சாகlங்க. நானும் தெரியாமத்தான் கேட்கறேன் , பெண் டாட்டி, புள்ளை, என்கிற பாசமோ; குடும்பம்ங்கற பொறுப்போ இல்லாத நீங்கள்ளாம், ஏன் அணி யாயமா ஒரு பாவமும் அறியாத பெண்ணை, கல்யாணம்ங்கற பேராலே கட்டிக் கிட்டு வந்து சித்திரவதை பண்ண நீங்க???

'ஐயா... அப்படியெல்லாம் சொல்லாதீங்க எஜமான். இதுதாங்க கடைசி வாட்டி. இனிமே அந்தச் சனியனே கையாலே தொடல்லிங்க??.