பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

28

ஆறுமுகம் மிகவும் தாழ்ந்த குரலில் கூறி ணான் :

'ரெண்டுந் தானுங்க??.

பலவேசம் பிள்ளை அவனை வெறுப்போடு பார்த்தார். 'இதைச் சொல்றப்போ உனக்கு வெட்கமாயில்லையா ஆறுமுகம்? சேர்வையோடு ஆளுங்களை அரிவாளாலே .ெ வ ட் ட ற தா நினைச்சிக்கிட்டு, அவர் தோட்டத்திலே குலை போட்டு நின்ன வாழையை யெல்லாம் வெட்டிச் சாய்ச்சுப் பிட்டீங்களேடா பாவிங்களா..??

தன்மீது அடுக்கடுக்காய் சுமற்றப்படுகிற குற்றங்களை எல்லாம் ஒப்புக் கொள்கிற பாவனை யில் ஆறுமுகம் மெளனமாகக் குனிந்த தலை நிமிரா மல் நின்று கொண்டிருந்தான்.

'என்னடா, நான் கேக்கறேன், பதிலையே காணோம்' என்று பலவேசம் அவன் மெளனத் தைக் கலைத்தார்.

'ஏதோ புத்திகெட்டுப் போச்சு; இனிமே இப் படி நடக்காதுங்க.’’

'ஆயிரம் ரூபாய்க்கு மேலே நஷ்டமாமே. உன் புத்தி கெட்டுப் போனதுக்கு; அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதமா? ஆயிரம் ரூபாய் யாருடா குடுப்பா???