பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

3

'மதுபானக் கடை என்பது நரகப் பாதை யிலே போகும்போது கட்டணம் வசூலிக்கும் ஒரு டோல்கேட் ஆகும்.”

-டி. ஆண்டர்சன்

பலவேசம் பிள்ளையின் பங்களாவிலிருந்து புறப்பட்ட பூவாயியின் மனம் பலவித எண்ணங் . களினால் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது. தன் னைப் போலவே, ஏராளமான பெண்கள் தங்க ளுடைய குடிகார கணவன்மார்களால் நிதம் நிதம் தொல்லை அநுபவித்து வருவதை அவள் அறி வாள். ஆனாலும், அவர்கள் எல்லாம் துணிச்ச லாக முதலாளி முன் நின்று, தங்கள் புருஷனை விட்டுக் கொடுத்து-தங்கள் குறைகளை எடுத்துக் கூறுவார்களா என்றே பூவாயிக்கு பெரும் கவலை யாக இருத்தது. ஆனால்

குப்பத்திலுள்ள தன்னைப் போன்ற குடி யானவப் பெண்களைச் சந்தித்து விஷயத்தை எடுத்துக் கூறியபோது; அவர்கள் எல்லோரும் பூவாயியோடு சேர்ந்து கொண்டு விட்டார்கள். அவள் கூறுகிற எதையும் கேட்கத் தயார் என்று முழு உற்சாகத்துடன் கூறினார்கள்.

எப்படியாவது, தங்கள் கணவனைப் பாழும் குடியிலிருந்து மீட்க வேண்டும்; குடும்பத்தில்