பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

30

அமைதி நிலவ வேண்டும்”, என்பதே அவர்களது ஒரே லட்சியமாக இருந்தது. இதைக் கண்டு பூவாயி மகிழ்ந்து போனாள். சட்டிப் பானை கழுவுவதிலிருந்து, சாணி பொறுக்குவது வரை ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாத நாளே கிடையாது. இப்படிப்பட்ட இவர்கள், 'இந்த ஒரு விஷயத்திலாவது இப்படி ஒற்றுமை யாக, தன்னுடன் ஒத்துழைக்க முன்வந்தார்களே’ என்று அவள் மனம் பூரித்துப் போனான். உடனே அவள் இந்த நற்செய்தியைத் தன் முதலாளியிடம் சென்று கூறினாள்.

இதைக் கேட்ட பலவேசம் பிள்ளையின் மனமும் மகிழ்ச்சி அடைந்தது. இனிமேல் இதற்கு ஒரு வழி பிறந்து விடும் என்று அவர் நம்பினார். உடனே பூவாயியை நோக்கி அவர், 'நாளைக்கு எல்லாக் குடியான வங்களுக்கும் வயல்லே வேலை இருக்கு. அதனாலே அவங்க எல்லாம் அங்கே போயிடுவாங்க. அதனாலே, நீங்க வீட்டு வேலை களை முடித்துக் கொண்டு, எல்லோரும், நம்ம புளியந் தோப்புக்கு வந்துடுங்க. நானும் வர்றேன். அங்கே எல்லோரும் கூடிப் பேசி ஒரு முடிவு எடுக்க லாம்??, என்றார்.

பூவாயியும், “சரி” என்று தலையாட்டி விட்டு; குப்பத்துப் பெண்களிடம் எல்லாம் இதைக் கூறி னாள்.