பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

38

‘'என் அப்பன் வீட்டிலேருந்து நான் காதுலே மூக்கிலே போட்டுக்கிட்டு வந்ததையெல்லாம் ஒண்ணுவிடாமெக் கழட்டிக் கி கா டு த் தா ச் சு எஜமான்; இப்ப நாலு நாளா, கழுத்துத் தாலி யையும் கழட்டிக்கொடு; இல்லாட்டி அப்பன் வீட்டி லேருந்து ஏதாச்சும் வாங்கிட்டு வான்னு ஒரே ரோதனைங்க. இந்தப் பூவாயிக்கு, எல்லா விஷ யமும் தெரியுமுங்க. பிள்ளைங்க எல்லாம் கஞ்சி கூட இல்லாமெ, பசி...பசி?ன்னு பறக்கு துங்க??என்று கூறும்போது அவள் தன்னையும் மீறி அழுதுவிட்டாள்.

பலவேசம் பிள்ளை அவளைச் சமாதானப் படுத்தி, நீங்க சொல்லறதெல்லாம் நெசம்னு ஒத்துக்கறேன்; எனக்கும் தெரியும். ஆனால்... இதையெல்லாம் என்கிட்டே முறையிட்டு என்ன பிரயோசனம்? இதுக்குப் பரிகாரம் உங்க கையிலே தானே இருக்கு,’’ என்றார்.

அதைக் கேட்ட பெண்கள் ஆச்சர்யத்துடன், 'எங்க கையிலேயா? இந்தக் குடிகாரங்களை நாங்க திருத்தறதுங்களா?’’ என்றனர்.

'ஆமாம். ஏன் இப்படி ஆச்சர்யப்படlங்க? காந்திஜியே இதைப்பத்தி ஆணித்தரமாச் சொல்வி யிருக்கார். கள்ளுக் கடைகளை அரசாங்கம் இழுத்துப் பூட்டினா மட்டும் போதாது; நாட்டிலே பூரண மதுவிலக்கைக் கொண்டு வரணும்னா அது

மய-3