பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

37

கள் கேட்டபோது பலவேசம்பிள்ளை தன் திட்டத்தை விளக்கிக் கூறினார்.

'குடிகாரனைத் திருத்தறதுக்கு முந்தி, அவனைக் குடிக்க முடியாமல் செய்யணும். அதாவது, நீங்க அத்தனை பேரும் ஒத்துமையா, ஒன்னுசேர்ந்து கள்ளுக்கடை முன்னாலேபோய் நின்று கொண்டு மறியல் பண்ணனும்.

முதல்லே உங்க புருஷனை, குடிக்க வேணாம், வீட்டுக்கு வாங்கன்னு கெஞ்சிக் கேளுங்க” என்று பல வேசம் கூறிக் கொண்டிருக் கும் போதே, அதெப்படிங்க, குடிக்க வந்த இடத்திலே போய் நின்னுகிட்டு-குடிக்க வேணாம் வீட்டுக்கு வா மச்சான்னா; கழுத்தையில்லே சீவிடு வாங்க?’ என்றாள் ஒரு பெண்மணி.

உடனே பலவேசம்பிள்ளை, நீங்க சொல்ற படி நடந்தாலும் ஆச்சர்யப் படறதுக்கு ஒண்னும் இல்லே. குடிக்காரனுக்கு, மதுவைவிட இந்த உலகத்திலே பொண்டாட்டியோ, பிள்ளையோ, வேறு யாருமே பெரிசுமில்லே; லட்சியமுமில்லே. ஆரம்பத்திலே, இந்தமாதிரியான எதிர்ப்புகளுக் கும் தியாகங்களுக்கும் நம்மை உட்படுத்திக் கொண்டுதான் ஆகணும். வேறுவழியே இல்லை.

ஒரு நன்மையை அடையறதுக்கோ, அல்லது ஒரு தீமையைக் களையறதுக்கோ கஷ்டப்படாமல் இந்த உலத்திலே எதையும் சாதிக்கவே முடியாது.