பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

41

மற்றவர்களுக்கெல்லாம் பொதுவான ஒரு இடம்தான்-அதாவது கடையின் முன்னால் தாறுமாறாகப் போடப் பட்டிருக்கும் ஓட்டை உடைச்சல் பெஞ்சிகளும்; தரை டிக்கெட்டும் தான்.

இருப்பதில் சுமாரான பெஞ்சிகளை, முன் னரே வந்து விட்ட ஆறுமுகத்தின் கோஷ்டியினர் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர்.

ஆறுமுகம், ராமன், மாயாண்டி, பக்கிரி, சொக்கன், தொப்பளா, குப்பன், கருப்பன் ஆகி யோரெல்லாம் அந்தக் கடையின் மரியாதைக்குரிய வாடிக்கையாளர்கள். காரணம் அவர்கள் பலவேசம் பிள்ளையின் பண்ணையில் வேலை பார்க்கிறார்கள். அந்தப் பண்ணையாட்களுக் கெல்லாம் காடையன் ஒரு தனி கெளரவம் காட்டு வது வழக்கம். ஏனெனில், அந்த ஆட்கள் எல்லாம் பண விஷயத்தில் வெகு காரக்ட். அவர்களை கடன் சொல்லும் நிலைமையில் பலவேசம் விட்டு வைப்பதில்லை என்பதுதான் உண்மை.

அன்று சனிக்கிழமை. எல்லோருடைய மடி யும், தாராளமாகவே கனத்திருந்தது. சுவாரஸ்ய மாக, கையிலுள்ள மது புட்டிகளுடன் கொஞ்சிக் கொண்டிருக்கும் நண்பர்களிடம், மாயாண்டி கோபமாகத் தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித் துக் கொண்டிருந்தான்.