பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

44

போறது, இதைப்பற்றி எல்லாம் என்கிட்டேக் கேட்க இவர் யாரு? இவருக்கு என்ன ரைட்டு: இருக்கு’ என்றான்.

குடித்துக் கொண்டிருந்த ராமன், ‘அவரை காயறே! நம்ம கழுதைங்களை காலெ ஒடிக்கணும். "நுணுக்’னு ஒண்ணுன்னா முதலாளி கிட்டேப் போயில்லே ஒப்பாரி வைக்கறாளுவ. இந்த நாய்ங்களுக்கு வெக்கம் வேணாம்' என்று குளறினான்.

'இவங்க தான் போறாங்க. அந்தப் பெரிய மனுஷன் நல்ல புத்தி சொல்லி, இனிமே இங்கே வராதீங்கன் னு சொல்ல வேணாம். இவங்கள்ளாம். ஒரு பெரிய மனுஷங்களா?’ என்று கேட்டான், அரைமயக்கத்தில் ஆடிக் கொண்டிருந்த அய்யாக் கண்ணு.

உடனே அதை ஆமேதிப்பது போல், **ஆமாண்ணே. நானும் .ெ க ஞ் ச த | ள ா க் கவனிச்சுக்கிட்டுத் தான் வற்றேன். வர வர அவரு போக்கே சரியா இல்லே?’ என்றான் மாரிமுத்து.

'எப்படிடா சரியா இருக்கும். பெரிய பண்ணையாரு. பெண்டாட்டியை வேறே, சின்ன வயசிலேயே பறி கொடுத்துட்டாரு. ஒரே பைய னையும் கண்காண மே, பட்டணத்துக்குப் படிக்க அனுப்பிட்டாரு. வயசுப் பொண்ணுங்க, நேரமும் காலமும் இல்லாமே படி ஏறி அவரு வீட்டுக்குப்