பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

46

அதன் பிறகு, தான் அந்த வீட்டை விட்டு வெளியே வருகிற வரை, அவள் தன் கண்ணில் படாமலே ஒளிந்து இருந்ததையும் -

இப்போது கோதண்டம் முதலாளியைப் பற்றிக் கூறிய வார்த்தைகளையும் ஒன்றாகக் கூட்டிப் பெருக்கி, கழித்துப் பார்க்கையில் -

"அப்படியும் இருக்குமோ? - எ ன் கி ற சந்தேகப் பொறி அவன் உள்ளத்திலும், அனலாய் பறக்கத் துவங்கியது. தன்னையும் மீறி அவன், :பூவாயி...’’ என்று அலறியப்படித் தன்கையில் இருந்த மதுப்புட்டியை ஒங்கித் தரையில் அடித் தான். அறு சுக்கு நூறாகி, மது வெள்ளத்தில் பள பளத்துக் கொண்டிருந்த போது பாவாடை கூறினான்:

  • அண்ணே; அதோ பாரு, கூட்டத்திலே முன்னாலே வர்றது உன் சம்சாரம் பூவாயிபோலே தான் இருக்கு. அவ பின்னாலே ஒரு பொம்பளைப் பட்டாளமே இல்லே திரண்டு வருது’’, என்று எங்கோ பார்த்து தொளப்பன் கூறியபோது தான், ஆறுமுகம் அந்தத் திசையையே திரும்பிப் பார்த் தான்,

கையில் ஒரு கம்பை ஏந்தி, அதில் ஏதோதுணியைக் கொடிபோல் கட்டிப் பறக்க விட்டுக் கொண்டு தூரத்தில் அவள் தலைமை வகித்து