பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

54

ஆட்டுக்குப் போய் புள்ளங்களைவும் வெட்டிப்புதை யுங்க.குடும்பத்தையே ஒருவழியாபுகைச்சுட்டு நீங்க உங்க உஷ்டம் போலக் குடிச்சுக் கூத்தடியுங்க. ஆனா...நாங்க உசிரோடு இருக்கிற வரைக்கும்... இனிமே உங்களை இந்தக் கள்ளுக்கடைப் பக்கம் தலை வெச்சுப் படுக்க விட மாட்டோம். இது சத்தியம்.??

அரை மயக்கத்தில் கிறங்கிக் கொண்டிருந்த அந்தக் கூட்டம் கூட ஒரு நிமிஷம் பூவாயியின் பேச்சைக் கேட்டு ஸ்தம்பத்து நின்று விட்டது.

'ஏண்டா வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கீங்க. அவ கையிலே இருக்கிற கொடிக் கம்பைப் பிடுங்கி, அதாலேயே இந்தக் கழுதைங்களை யெல்லாம் இங்கிருந்து அடிச்சு விரட்டுங்கட’’ என்று ஒரு உத்தரவு போல கோதண்டம் கர்சித்துக் கொண் டிருந்தான்.

அத்தனை நேரம் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு, வியாபாரத்திலேயே குறியா இந்த காடையன் திடீரென்று உஷா ரானான். இனியும் சும்மா இருத்தால், இவர்கள் சண்டை தன்னுடைய கடையைப் பாதித்துவிடும் என்கிற கவலையில் - அல்லது பயத்தில் - அவர்கள் எ ல் ேலார் முன்னிலையிலும் வந்து நின்று கொண்டு கூறினான்: