பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

5

ஒரு மனிதனிடமுள்ள தெய்வீகத்தன்மை,

புகழ், உயர் குணம் போன்ற ஒவ்வொன்றையும்

மதுவானது கீழ்மைப்படுத்தி சிதைத்து ஒழிப்ப

தோடு; தீங்கானவை, கேவலமானவ்ை,

கபடானவை என்கிற அனைத்தையுமே மது ஒரு வனுக்குப் புகட்டாமல் விட்டு விடுவதில்லை.” o -ஜான் பி-காஃப்

மறுநாள் அதிகாலை நேரம். வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. மேகத்தினுள் சிக்கிக் கொண்ட சூரியன், வெளியே வரவே பயப்பட்டுக் கொண்டிருந்தர்ன். இடும்பன் மலைச்சாரலை ஒட்டிய வடக்குப் பாகத்திலுள்ள சவுக்கைத் தோப்பில் ஆறுமுகத்தின் நண்பர்கள் எல்லாம் வந்து கூடி வெகுநேரமாகிவிட்டது. ஆனால், காரியத்தை முடித்துவிட்டு கருக்கலிலேயே வந்து விடுவதாகக் கூறிய ஆறுமுகத்தை மட்டும் இன்னும் காணோம்.

இது கூடியிருந்தவர்கள் உள்ளத்தில் பெரும் கவலை யையும், ப்யத்தையும் மூட்டியது.

"ஏன் கருப்பண்ணே, இன்னும் ஆறுமுகத் தைக் காணோம்?’’ என்று கவலையோடு கேட் டான் சொக்கன். -