பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

71.

போன இடத்திலே, எதினாச்சும், இசை கேடா அண்ணன் மாட்டிக்கிட்டிருக்குமோ?’’

'சே! அப்படியெல்லாம் இருக்காது. ஆறு முகம் கில்லாடி. நெனச்சா அந்தக் காரியத்தை முடிக்காமே வரமாட்டான் ’’ என்றான் பக்கிரி.

இப்படி இவர்கள் கவலையும் சமாதான மு மாய்ப் பேசிக் கொண்டிருக்கும்போது, தள்ளாடிய படி முகத்தில்-அந்த அதிகாலை வேளையிலும்வியர்வை வழிந்தபடி ஆறுமுகம் அங்கு வந்து சேர்ந்தான். .

அவனுடைய கோலத்தைக் கண்டு, அங்கு கூடிஇருந்த அனைவரும் பதறிப் பே யினர்.

என்னண்ணே, மூஞ்சியெல்லாம் வெளிறிப் போய் கிடக்கு. உடம்பு வெடவெடக்குது. ரவிக் குப்போன காரியம் என்ன ஆச்சு அண்ணே?’’ கவலையோடு விசாரித்தான் பக்கிரி.

'தம்பி...! அது ஒரு பெரிய கதை நான் ஒண்ணு நெனைக்க தெய்வம் ஒண்னு நெனச் சிடுச்சு. கையிலிருந்த கட்டையாலே ஆளைப் போட்டு நொறுக்கிட்டுப் பார்த்தா...’’ ஆறுமுகம் குரல் தடுமாறியது. ---

"ஏன் அண்ணே முதலாளியை ஒரேயடியா ஊருக்கு அனுப்பிட்டியா?’’ அனைவருடைய முகத்திலும் கவலைக் குறி தோன்றியது; பயந்து