பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

74

ஆறுமுகம் அவனை முறைத்தபடி, 'முழுக்கச் சொல்லித் தொலைக்கறேனேடா; அதுக்குள்ளரே அவசரமா? முதலாளி ஒரு கையாலே, என் மேலே மூடியிருந்த போர்வைப் பிடிங்கி எறிஞ்சிட்டு, *ஏண்டா ஆறுமுகம் அன்னிக்குத்தான் போதை யிலே, சேர்வைன்னும், அவரு ஆளுங் கன்னும் நினைச்சுக்கிட்டு தோட்டத்து வாழையை எல் லாம் வெட்டிச் சாச்சே, இன்னிக்காவது குடிக் காமெ வத்திருக்கப் படாதா போர்வைக்குள்ளாரே நான் படுக்க வெச்சிருந்த, திண்டு தலைகாணியை யெல்லாம் போட்டு, தும்சம் பண்ணிட்டியே. ஏண்டா ஆறுமுகம், என்னை அடிக்கனும்னு, உனக்கு ஆசையோ, ஆத்திரமோ இருந்தா! அதுக்கு இவ்வளவு கஷடப்பட்டு, கண்னு முழிச்சு திருட்டுத் தனமா வந்திருக்க வேணாமேடா. பகல் லேயே தாராளமா நீ வந்து அடிச்சுப் போட்டுட்டுப் போகலமே. என்னை அடிக்க உனக்கு இல்லாத உரிமையா??? அப்படீன்னு அவரு பேசப் பேச, நான் பயந்து போயி, அங்கிருந்து தப்பிச்க ஒடப் போன போது, வேலைக்கார ரங்கன் என்னைப் பாய்ஞ்சு பிடிச்சு நிறுத்தி, எஜமான் இந்த நன்றி கெட்ட நாயை போலீசிலே ஒப்படைச்சு நல்ல பாடம் கத்துக் கொடுத்து அனுப்பனும் எஜமான்,' என்று தூணலே கட்டப் போன போது, எஜமான் அவன் கிட்டே, வேண்டாம் ரங்கா ஆறு முகத்தை விட்டுடு. பாவம், அவன் போகட்டும்,’’ ன்னு சொல்லிட்டாரு - என்று கூறிய ஆறுமுகம்,