பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

6

தனக்குத் தீமை விளைவிக்கும் என்று அறிந் தும்கூட, மனிதன் மதுவின் விலையில்விழுகிறான். விழுந்த பிறகு மீள முடியாமல் வாழ்வையே அழித்துக் கொள்கிறான்.

எப்படித் தொடங்கினோம் என்று புரியா மலே இன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் போதைப் பொருட்களின் பிடியில் சிக்குண்டு மீள முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் பாழாகிறது.

எந்த முழு மனிதனையும் மது முட்டாளாக்கு கிறது. அருந்திய உடனேயே அவன் சுய சிந்த னையை இழக்கிறான்.

படிப்படியாகத் தன்மானத்தையும்; ஈட்டிய பொருளையும் இழக்கிறான். நண்பர்கள், வீடு, மனைவி, மக்கள் அனைவரையுமே ஒவ்வொன் றாய் இழந்து, ஒரு நாள் அவன் தன்னையும் இழக்கிறான்.

இந்த அவல நிலைக்கு ஆளாக்கும் மதுவின் மரணப் பிடியினின்றும் மக்கள் விடுபடவேண்டும். அவர்கள் உள்ளத்தில் மதுவைப் பற்றிய சிந்தனை, அறவே ஒழியவேண்டும் என்பதே உலகின் இன்றைய பிரார்த்தனை,

நம் பாரத நாடு பழம்பெரும் நாடு. இந்த மேலைநாட்டு நாகரிகத்தினின்றும், நம் பாரத நாடு ஆதிகாலந் தொட்டு, மாறுபட்டே விளங்கி வந்துள்ளது.