பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

7

"உள்ளொற்றி உள்ளுர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய்பவர்'

இது வள்ளுவரின் வாக்கு:

(கள்ளை மறைவாக இருந்து உண்டு தம் அறிவு மயங்குவோர்; உள்ளூர் மக்களால் அவ்' வுண்மை அறியப்பட்டு; எந்நாளும் எள்ளி நகைக் கப்படுவர் என்பது பொருள்.)

குடிப்பது பாவம் என்றும்குடிப்பது தீய செயல் என்றும்குடி குடியைக் கெடுக்கும் என்றும்பிறர் காணப் பொது இடங்களில் குடிப்பது

கெளரவக் குறைவான செயல் என்றும் உறுதி கொண்டிருந்த இந்திய மக்களிள் மனம்

இடையில் வந்த ஆங்கில ஆட்சியால்: அவர் களது கவர்ச்சியால் நிலை தடுமாறத் துவங் கியது. ஆயினும் குடிப்பவர்களின் நியாயப் படுத்தும் செயலையும் சொல்லையும் இந்த பாரத பூமி அங்கீகரிக்காததே இதன் தனிச் சிறப்பும்; நம்பிக்கைக்குரிய விஷயமும் ஆகும்.

மதுவின் பிடியில் சிக்கியுள்ள ஒரு கிராமத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவலின் நோக்கம்; மனிதன் மயக்கம் தெளிந்து; ஒழுக்கம் மேலோங்கி தன் அயராத உழைப்பினா லும், அறிவினாலும் தாய்நாட்டின் சுபிட்சமான