பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

92

மீனாட்சி பயந்து போய், தாயின் கால்களைக் கட்டிக் கொண்டு அழுதது.

'அந்தப் பலவேசம் மொவத்திலேயே நீ எதுக்கடி இனிமே முழிக்கணும். உனக்கு நான் புகுஷனா...அவன் புருஷனா! இனிமே அவன் பேச்சை இந்த வீட்டிலே எடுத்தா ஒரே வெட்டா உன்னை...... ’’ என்று அவன் கத்திக் கொண் டிருக்கும் போதே, தட தடவென்று உள்ளே நுழைந்த பொன்னி வெடுக் கென்று குறுக்கே புகுந்து, ஆறுமுகத்தின் முறட்டுப் பிடியினின்றும், பூவாயியின் தலைக்கு வி டு த ைல வாங்கிக் கொடுத்து, நீ இந்தக் குப்பத்தை ஒழிச்சுக் கட்டத் தான் வந்திருக்கே’ என்று ஆறுமுகத்தைப் பார்த் துக் கத்தினாள். i

பொன்னியைப் பார்த்ததும் பூவாயி புதுத் தெம்பு வந்தவளைப் போல, 'தங்கச்சீ...இது பண்ணிட்டு வந்திருக்கிற காரியத்தைக் கேட்டியா? சோறு போடற நம்ம எஜமானை சவுக்குப் தோப்பிலே கழுத்தை நெறிச்சு அடிச்சிப் போட் டுட்டு வந்திருக்காம்...” என்று பூவாயி கூறிக் கொண்டிருக்கும் போதே, பொன்னி அக்கா? என்று குறுக்கிட்டுக் கத்தினாள்.

'இதோடு பேச்சைக் கேட்டுக்கிட்டு பேச றியே..! ஐயோ - இது அடிச்சுப் போட்டது கழுத்தை நெறிச்சது எல்லாம் என் புருஷனைத்