பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

94

போட்டு அனுப்பியது. அதையும் புருஷன் திருட்டுத் தனமாய் எடுத்துச் சென்று கூட்டாளி களுடன் குடித்துத் தீர்த்திருக்கிறான். அவளால் கோபத்தை அடக்க முடியவில்லை. பூவாயி பக்கத்தில் இருக்கிறாள் என்பதையும் மறந்து ஆறுமுகத்திடம் கத்தினாள்.

'அப்படிப்பட்ட உன்னோடு உசிருக்கு உசி ரான சினேகிதனுக்குத்தான்யா நீ நல்ல கைமாறு பண்ணிருக்கே. என் புருஷன் வாங்கிக் குடத்த கள்ளைக் குடிச்சுப்புட்டு அவரு தலையை உடைச்சு; கழுத்தை வேறே நெரிச்சுக் கொல்லப் பார்த்திருக்கியே..! நீ நல்லா இருப்பியா??? என்று கூறிவிட்டு அழுதாள்.

பூவாயிக்கு ஒரு நிமிஷம் ஒன்றுமே புரிய வில்லை. பொன்னியின் பக்கம் திரும்பி, எேன்னடி இதெல்லாம். ஒரே குழப்பமாயிருக்கு. இதானா, எஜமான் கழுத்தை நெரிச்சுப் போட் டுட்டேன்னு சொல்லுது. நீயானா, அது நம்ம எஜமான் இல்லே-உன் புருஷன்னு சொல்லறே! கொலுசுன்னு .ெ ச ல் ல றே. என் மனசை என்னமோ பண்ணுதடி என்றாள் பூவாயி’’.

உடனே பொன்னி அக்கா, நான் சொல்லற கதை முழுவதையும் கேட்டுட்டுப் பேசு. என் புருஷன் எனக்குத் தெரியாமே என் வெள்ளிக் கொலுசை எடுத்துட்டுப் போயிருக்கு. அதை அடகு வெச்சு, கள்ளு வாங்கி அத்தினி பேரும்