பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

95

கண்ணு மண்ணு தெரியாமெ குடிச்சிருக்காங்க. போதை நல்லாத் தலைக்கு ஏறினதும், இது என் புருஷனை நம்ம எஜமான் பலவேசம்னு நெனச் சுக்கிட்டு, கட்டையாலே மண்டைலே அடிச்சுப் பிட்டு, கழுத்தை வேறே நெருச்சுப் போட்டுட்டு; இங்கே உன்கிட்டே வந்து ஒண்ணுகிடக்க ஒண்னு உளருது அக்கா உன் புருஷன்’’ என்று பொன்னி கூறிக் கொண்டிருக்கும் போதே ஆறுமுகத்திற்கு எல்லை மீறிக் கோபம் வந்து விட்டது.

'ஏய்...யாரைப் பார்த்துடி... உளறான்னு சொன்னே! என்னை என்ன குடிகாரப் பயல்னு நினைச்சியா! இதப்பாரு...இப்பவே உன்னையும், அந்தப் பலவேசம் கிட்டேயே அனுப்பி வைக் கிறேன்’ என்று கத்தியபடி, தன் கையிலிருந்த தடியால் பொன்னியை அடிக்கப் போனான்.

இதைச் சற்றும் எதிர்பாராத பூவாயி தன் இடும்பிலிருந்த குழந்தையுடன் பொன்னி மீது அடி படாமல் தடுக்க குறுக்கே பாய்கிறாள். ஆறுமுகத் தின் அந்த அடி குழந்தையின் தலையில் பட்டு ரத்தம் பீறிடுகிறது. -

'பாவி! பெத்த புள்ளையையே கொன்னுப்பிட் டியே...” என்று பூவாயி பெரிதாக அழுதாள்.

பொன்னி பதறியபடி, வா...அக்கா சிக்கிரம். குழந்தை தலையிலே ரத்தம் கொட்டுது: என்று