பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

97

ஆறுமுகத்தின் குழந்தை தலையில் தாற்காலிக மாக மருந்திட்டு, பெஞ்சி மீது வைத்தியர் படுக்க வைத்திருந்தார். அருகில் பூவாயி அழுது கொண் டிருந்தாள்.

பலவேசம் பிள்ளையைக் கண்டதும் வைத் தியர், ரொம்ப ரத்தம் போயிடுச்சு. சீக்கிரமா டவுனுக்குக் கொண்டு போய், சர்க்கார் ஆஸ்பத் திரியிலே சேருங்க...இல்லாட்டி உ சி ரு க் ேக ஆபத்து ’என்று துரிதப்படுத்தினார்.

பலவேசம் சற்று கவலையுடன் உசிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே’ என்று கேட்டார்.

  • ஒண்னும் சொல்ல முடியாது, அடி பலமாக் தான் பட்டிருக்கு. ஆனாலும் கவலைப்படாதீங்க, கடவுள் காப்பாத்துவார். சீக்கிரமாப் புறப்படுங்க” என்றார்.

வாசலில் தயாராகக் கர்த்திருந்த வண்டியில், பூவாயி தன் குழந்தையை அனைத்தபடி ஏறி அமர்ந்து கொண்டாள்.

'நானும் கூடவறேனுங்க” என்ற பொன்னி யிடம், வேண்டாம்; நீ உடனே வைத்தியரை உன் வீட்டுக்கு அழைச்சிட்டுப்போய்; உன் புருனைக் கவனி. முடுஞ்சா காலமே ஆஸ்பத் திரிக்கு வா’ என்று கூறிவிட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்து வேகமாக ஒட்டஉத்திரவிட்டார்.

மய-7 - i.