உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

347



“நமணநந்தியும் கருமவீரனும்
தருமசேனனும் மென்றிவர்
குமணமாமலைக் குன்றுபோல்நின்று
தங்கள் கூரை ஒன்றின்றியே
ஞமண ஞாஞண ஞாண ஞோண
மென்றோதி யாரையும் நாணிலா
அமணராற் பழிப்புடையரோ
நமக்கடிகளாகிய அடிகளே”[1]

இதில், நந்திகணம் சேனகணம் முதலிய பிரிவுகளைச் சேர்ந்த சமண சமயத் துறவிகள் பிராகிருத மொழியில் மந்திரங்களைக் கூறியதைக் குறிப்பிடுகிறார். பிராகிருத மொழியில் ங, ஞ, ண, ந, ம, ன என்னும் மெல்லோரைச் சொற்கள் அதிகமாக வழங்கப்படுகின்றன. அதைக் குறிக்கவே “ஞமண் ஞாஞண் ஞாண ஞோணம்" என்று கூறினார்.

“கரியமனச் சமண் காடியோடு கழுக்களால்
எரிய வசணவுந் தன்மையோ......”[2]

“இருந்துண்தேரரும் நின்றுண்சமணுரும்
ஏச நின்றவன்”[3]

“பொய்ச் சமண் பொருளாகி ஈண்டு நம்பி”[4]

“நன்மையொன் றிலாத்தேரர் புன்சமணாம்
சமயம் மாகிய தவத்தினா ரவத்தத் தன்மைவிட்டு”[5]

“நமையெலாம் பலர்இகழ்ந் துரைப் பதன்முன்
நன்மை யொன்றிலாத் தேரர் புன்சமணாஞ்
சமயமாகிய தவத்தினார் அவத்தத் தன்மை
விட்டுழி நன்மையை வேண்டில்”[6]

“குண்டாடியும் சமணாடியும் குற்றுடுக்கையர்தாமும்
கண்டார்கண்ட காரணம்மவை கருதாது கைதொழுமின்”[7]

“குண்டாடிய சமணாதர்கள் குடைச்சாக்கிய ரறியா
மிண்டாடியவது செய்தது வானால் வருவிதியே”[8]

  1. 5
  2. 6
  3. 7
  4. 8
  5. 9
  6. 10
  7. 11
  8. 12