உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

126

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4


இருந்தன.


சங்கு வளைகளை அணிவதை அக்காலத்து மகளிர் நாகரிகமாகக் கருதினார்கள். அன்றியும் அது மங்கலமாகவும் கருதப்பட்டது. கைம் பெண்கள் தவிர ஏனைச் சுமங்கலிப் பெண்கள் எல்லோரும் சங்கு வளைகளை அணிந்தார்கள். 'அணி வளை முன்கை ஆயிழை மடந்தை' (அகம், 361 : 4) 'சின்னிரை வால் வளைக் குறுமகள்' (குறும். 189-6) 'வளைக்கை விறலி' (புறம், 135 : 4) 'வல்லோன் வாளரம் பொருத கோணேர் எல்வளை அகன்தொடி செறிந்த முன்கை' (நற். 77 : 8-10) என்றெல்லாம் சங்க நூல்களில் அக்காலத்து மகளிர் வளையணிந் திருந்தது கூறப்படுகின்றன. சொக்கப் பெருமான் வளையல் விற்றதாகத் திருவிளையாடற் புராணத்தில் (வளையல் விற்ற படலம்) கூறப் படுகின்றது. இடம் புரிச் சங்கினால் செய்த வளையல்களைச் சாதாரண நிலையில் உள்ள பெண்கள் அணிந்தார்கள். வலம்புரிச் சங்குகள் விலை யதிகமானபடியால் செல்வச் சீமாட்டிகளும் இராணிகளும் அணிந்தார்கள். செல்வ மகளிர் பொற்றோடு (பொன் வளையல்) அணிந்து அதனுடன் வலம்புரிச் சங்கு வளையலையும் அணிந்தார்கள். தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அரசியாகிய பாண்டிமாதேவி கைகளில் தங்க வளையல்களை அணிந் திருந்ததோடு வலம்புரிச்சங்கு வளையலையும் அணிந்திருந்தாள்.

'பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து'

(நெடுநெல்வாடை, 141-142)

என்று நெடுநெல்வாடை கூறுகிறது. காவிரிப்பூம்பட்டினத்திலே பேர் போன செல்வச் சீமானாக இருந்த மாநாய்கன் மகளான கண்ணகியும் வலம்புரிச் சங்கு அணிந்திருந்தாள். மதுரையில் கோவலனை இழந்து கைம்பெண் ஆனபோது கண்ணகி தன் கைகளில் அணிந்திருந்த சங்கு வளையைக் கொற்றவைக் கோயிலின் முன்பு தகர்த்து உடைத்தாள் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. 'கொற்றவை வாயிலில் பொற்றொடீ தகர்த்து' (கட்டுரைக் காதை, 181) பொற்றொடி - பொலிவினையுடைய சங்கவளை. அரும்பத உரை)

மணமகன், தான் மணக்க இருக்கும் மணமக்களுக்குச் சங்கு வளை கொடுப்பது அக்காலத்து வழக்கம். சங்குவளை அணியும் வழக்கம் தமிழகத்தில் மட்டுமல்லாமல், பாரதநாடு முழுவதிலும்