பக்கம்:மருதநில மங்கை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12புலவர் கா. கோவிந்தன்


நோய்த்தலையும்–நோய்க்கு மேலும்; 14. பூசல்–அலர்; 15, தார்–ஆடவர் அணியும் மாலை, தலைக்கோதை–மகளிர் அணியும் தலைமாலை; 16. ஈர்அணி–இருவகை அழகு; 17. தணந்த தன் தலையும்–விட்டுப் பிரிந்ததற்கு மேலும்; 18. கவ்வை– அலர்; கடப்பு–மிக்கது; ஓர்அணி–ஒப்பற்ற அணிகளால் ஆயவடு; 20. களிதட்ட–மகிழ்ச்சி, பிறபொருளில் செல்லும் கருத்தைத் தடுக்க; 21. அளி–அருள்; 22 வேட்டோர் திறத்து – விரும்பும் பரத்தையர்பால். பாகனும், தேரை நீட்டித்தாய் என்று பூட்டுவிடாது கடாஅய், விளியாது விரும்பிய வேட்டோர் திறத்து நிறுத்து என மாற்றுக

உள்ளுரை: வீங்குநீர், பரத்தையர் சேரி, நீலம், சேரி வாழ் இளம் பரத்தை; பகர்வர், பரத்தையரைக் கொணர்ந்து தரும் பாணர்; மலரைச் சூழ்ந்த வண்டு, பரத்தையரைச் சூழ்ந்து திரியும் தலைவன், பகற் காலத்தே மதநீர் உண்டு தங்குதல், பகற் காலத்தே சேரிப் பரத்தையரைப் புணர்ந்து கிடத்தல்; கங்குவில், முல்லைத் தேன் குடித்தல், இரவில் இற்பரத்தையோடு இன்பம் துய்த்தல்; வண்டு பொய்கையை மறத்தல், தலைவன் தன் மனைவியை மறத்தல் என உள்ளுறை கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/14&oldid=1129367" இலிருந்து மீள்விக்கப்பட்டது