பக்கம்:மருதநில மங்கை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2



ஊடுவேன் நான்!
கூடும் என் நெஞ்சு!

புலவர் பாராட்டும் பெருமை வாய்ந்தது வையை. நாட்டில் ஓடும் ஆறுகள் அனைத்தையும் புலவர்கள் பாராட்டுவதில்லை. தம் பாராட்டைப் பெறுதற்கேற்ற பெருமை வாய்த ஆறுகளையே அவர்கள் பாராட்டுவர். அத்தகைய பெருமை வையை ஆற்றிற்கு உண்டு. வையை யாற்றைக் காணும் வாய்ப்புடையார்க்கு அது விளங்கும். கார் காலத்து மழை பெற்று வையை யாற்றில் வெள்ளம் பெருகும். அதன் இரு கரைக்கண் கண்ணும் உள்ள மரங்கள் மலர்களால் நிறைந்து மணம் வீசும். காம்பற்று உதிரும் அம் மலர்களெல்லாம் வையை ஆற்றில் வீழ்ந்து, வெள்ள நீர் தோன்றாவாறு மூடி மறைக்கும். அதனால், “இது புனல் யாறு அன்று; பூ வாறு!” எனும் பெருமை அவ்வாற்றிற்குச் சூட்டுவர் புலவர். மலர்கள் நிறைய, மணமகள் மார்பில் கிடக்கும் மலர் மாலையோ என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/15&oldid=1129370" இலிருந்து மீள்விக்கப்பட்டது