பக்கம்:மருதநில மங்கை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14புலவர் கா. கோவிந்தன்


மருளுமாறு வளைந்து ஓடி வரும். அவ்வாறு, பாய்ந்தோடி வரும் வையை, தன் மதிலைச் சூழ்ந்து ஓடுவதால் பெருமையுற்றது மதுரை மாநகரம்.

மதுரை மாநகரில் இருந்து பாண்டி நாடாண்ட அரசருள், ஆற்றல் மிக்க பேரரசன் ஒருவன், பகைவரைத் தான் பாழ்செய்து மகிழ்வதல்லது, அப்பகைவரால் தான் அழிவுறாத் தறுகணாளனாய் வாழ்ந்திருந்தான். அவன் படை, “பகைவர் படையினை முற்றி அழிக்குமே யல்லது அவன் அரசிருக்கையாம் மதுரை, பகைவர் படையின் முற்றுகையைப் பார்த்திலது. அதனால், மதுரை, வையை யாற்றின் நீரால் முற்றப்படுவதல்லது, பகைவர் படையால் முற்றப்படுவதில்லை!” என அவன் பெருமையை அவன் தலைநகர்மீது ஏற்றிப் பாராட்டிப் பெருமை செய்தனர் மக்கள்.

புலவர் பாராட்டப் பேராற்றல் வாய்ந்த பேரரசாய் வாழ்ந்த அவன், தன் அரசமாதேவி வருந்தி வாடுமாறு, அவளை மனையகத்தே விடுத்து மறந்து, பரத்தையொருத்தியைக் காதலித்து அவள் மனை சென்று ஆங்கு வாழத் தொடங்கினான்.

அரசன் செயல் கண்டு வருந்தினாள் அரசமாதேவி. தம் மனைவியர்பால் உண்மை அன்புடையார்க்குப் பரத்தையர்பால் ஆசை பிறத்தல் நிகழாது. ஆதலின், பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்ட அரசன் உள்ளத்தில் அன்பில்லை. ‘என்பால் அன்புடையனல்லன் அரசன். நற்பண்பும் நல்லொழுக்கமும் உடையார், பரத்தையர் உறவு போலும் தீயொழுக்கத்தை நெஞ்சால் நினைக்கவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/16&oldid=1129372" இலிருந்து மீள்விக்கப்பட்டது