பக்கம்:மருதநில மங்கை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை17


தியங்கும் தன்மை அற்றது அது. இவையெல்லாவற்றிற்கும் மேலாக, என் உடன் இருந்தே, எனக்கு உற்ற துணையாய் வாழ்வது போல் ஊறுதேடும் இயல்புடையது அந்நெஞ்சு. யான் அவன் வரின், புலப்பேன் என்றால், அது கலப்பேன் என்னும். நான் ஊடுவேன் என்றால், அது கூடுவேன் என்னும், இவ்வாறு, நான் ஒன்று கருதின், அதற்கு மாறாகக் கருதத் தொடங்கி விட்டது. அவ்வியல்புடைய இந் நெஞ்சைத் துணையாகப் பெற்ற எனக்கு, எண்ணியதை எண்ணியவாறே பெறும் திண்மை, சொல்லியதைச் சொல்லியவாறே முடிக்கும் உறுதிப்பாடு எங்கே உண்டாகும்? என் நெஞ்சு என்னைக் கைவிட்டது மட்டுமன்று. எனக்கு எதிராக அவரோடு சேர்ந்தும் விட்டது. அந் நிலையில், அவரை ஏற்றுக் கொள்ளாது மறுத்தல் எவ்வாறு இயலும்? அதனால் அவரை ஏற்றுக் கொண்டேன். என் செய்வது?” என்று கூறிப் பெண்மையின் மென்மையை, மேன்மையினை விளக்கினாள்.

“கார்முற்றி இணர்ஊழ்த்த கமழ்தோட்ட மலர்வேய்ந்து
சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறப்புஎய்தி, இருநிலம்
தார்முற்றியது போலத் தகைபூத்த வையைதன்
நீர்முற்றி மதிப்பொரூஉம் பகைஅல்லால், நேராதார்
போர்முற்றொன்று அறியாத புரிசைசூழ் புனல்ஊரன். 5

நலத்தை எழில்உண்கண் நல்லார் தம்கோதையால்
அலைத்த புண்வடுக்காட்டி, அன்புஇன்றிவரின், எல்லா!
புலப்பேன்யான் என்பேன்மன்; அந்நிலையே அவன்காணின்
கலப்பேன் என்னும் இக்கையறு நெஞ்சே.

மருதம்-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/19&oldid=1129376" இலிருந்து மீள்விக்கப்பட்டது