பக்கம்:மருதநில மங்கை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18புலவர் கா. கோவிந்தன்



கோடுஎழில் அகழ்அல்குல் கொடியன்னார் முலைமூழ்கிப் 10
பாடுஅழி சாந்தினன் பண்பின்றிவரின், எல்லா!
ஊடுவேன் என்பேன்மன்; அந்நிலையே அவற்காணின்
கூடுவேன் என்னும் இக்கொள்கைஇல் நெஞ்சே.

இனிப்புணர்ந்த எழில்நல்லார் இலங்கு எயிறு உறாஅலின்,15
நனிச்சிவந்த வடுக்காட்டி நாண் இன்றிவரின், எல்லா!
துணிப்பேன்யான் என்பேன்மன்; அந்நிலையே அவன் காணின்
தனித்தேதாழும் இத்தனியில் நெஞ்சே.

என வாங்கு,
பிறைபுரை ஏர்நுதால்! தாம் எண்ணியவை எல்லாம்
துறைபோதல் ஒல்லுமோ, தூவாகாது ஆங்கே
அறைபோகு நெஞ்சு உடையார்க்கு?” 20

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனை ஏற்றுக் கொண்ட தலைவி, பிற்றை நாள் தோழிக்குச் சொல்லியது.

1. இணர்-பூங்கொத்துக்கள்; ஊழ்த்து-அலர்ந்து; தோட்ட-இதழ்களைஉடைய; 2. சீர்-சிறப்பு; இரு நிலம்- பெரிய நிலம்; 3. தார்-மாலை; முற்றியது-அணிந்தது, தகைபூத்த-அழகுமிக்க; 4. நேராதார்-பகைவர்; 5. புரிசை-மதில்; 6. நலத்தகை-நல்ல அழகு; நல்லார்-பரத்தையர்; கோதை-மாலை;7. எல்லா-ஏடிஎனும் பொருள்படும் விளிப் பெயர்; 9. கையறு-செய்யும் செயல் அற்ற; 10. கொடியன்னார்-பூங்கொடி போன்ற பரத்தையர்; 11. பாடு-பெருமை; 14. இனி-இப்பொழுது; இலங்கு- விளங்கும்; எயிறு-பற்கள்; உறாஅலின்-அழுந்துதலால்; 16. துனிப்பேன்-வெறுப்பேன்; 17. தனித்து-என்னைக் கைவிட்டுத் தான் மட்டும்; 19. ஏர்-அழகு; 20. துறைபோதல்-முற்ற முடித்தல்; ஒல்லுமோ-இயலுமோ; தூஆகாது-துணை ஆகாது; 21. அறைபோதல்-துணை புரிவார்போல் உடன் இருந்தே துன்பம் செய்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/20&oldid=1129377" இலிருந்து மீள்விக்கப்பட்டது