பக்கம்:மருதநில மங்கை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3



கனவினான் எய்திய செல்வம்


ங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த பெருமையுடையது மதுரை. கடுஞ்சொல் கடிதலும், பயனில் சொல் பாராட்டாமையுமாய சொல்லியல்பறிந்த பெரியோர்கள் வழி வந்தமையால், பொல்லாங்கு தரும் சொற்கள் புகுந்தறியாத காதுகளையுடையராய்த் தமக்கு முன்னே வாழ்ந்து, தம் வாழ்வில் தாம் பெற்ற உணர்வுகளை ஒன்று கூட்டி அளித்த உயர்ந்த பாக்களின் உறுதுணை கொண்டு, புலவர்கள் புதிது புதிதாக ஆக்கித் தரும் அரிய பாக்களின் அழகை நுகர்ந்து அகமகிழும் மதுரை மக்களுக்கு மன்னனாய்த் திகழ்ந்தான் ஓர் இளைஞன். ஆண்மையும் ஆற்றலும் ஒருங்கே அமைந்தவன் அவன். “இந்நாடு எல்லோர்க்கும் பொது. இதை ஆளும் உரிமை அனைவர்க்கும் உண்டு!” என்ற சொல்லைக் கேட்கப் பொறாது அவன் உள்ளம். உலகம் அனைத்தையும் தன் ஒரு குடைக்கீழ் வைத்து ஆள வேண்டும் எனும் ஆசைக்கு அடிமைப்பட்டுக் கிடந்தான் அவன். நல்ல காலம், அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/21&oldid=1129378" இலிருந்து மீள்விக்கப்பட்டது