பக்கம்:மருதநில மங்கை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24புலவர் கா. கோவிந்தன்


தொடர்பு கொண்டு திரிந்தாய். அவர் மார்பு அணைக்க அழிந்த உன் மாலை என்னை நோக்கி இகழ்கிறது. சூடுவார் இல்லாமையால், வட்டிலில் வறிதே கிடக்கும் மலர்போல் வாடிக் கிடக்கின்றேன் நான். ஆயினும், நான் உன்னைப் பழிக்கேன். பரத்தையர் பண்பு என்பால் இல்லை. அவர்கள் உன் நலன் ஒன்றே நயந்து வாழ்பவர். அதனால் அந்நலத்தை ஒருநாள் இழப்பினும், உன்னைப் பழிப்பர். நான் அங்ஙணம் செய்யேன். உன் நலம் பெறும் உரிமை உடைய நான், அந்நலத்தை இழந்து ஒரு நாள் அல்ல, பல நாளாக வருந்துகிறேன். எனினும், உன்னைக் காணாது வருந்தும் பரத்தையர், என் வாயிற்கண் வந்து நின்று, தம் கைவளை ஒலிக்கக் கதவைத் தட்டித் திறந்து உள்புகுந்து உன்னை என்பால் வினவும் நிலை கண்டும் நான் வருந்தேன். ‘அரசன் அறிவுடையனல்லன்; அன்புடையனல்லன்!’ எனப் பழிக்கும் அவர்களைப் போல், ‘அவன் எமக்கு உறவல்லன்!’ எனக் கூறி, உன்னை அவர் முன் பழித்துரைக்கேன். உனக்கு ஏற்ற இளையவள் வாழும் இல் எது எனத் தேர்ந்து திரியும் பாணனையும் பார்த்துள்ளேன். அப் பரத்தையர் வீட்டிற்கு உன்னைத் தேரேற்றிக் கொண்டு விடுக்கும் உன் பாகன் கொடுமையையும் அறிவேன். ஆயினும், அவர்களை நான் பழிக்கேன். ஐய! இவ்வாறு, ஒரோவொருகால் ஈங்கு வரும் உன் வரவால் மகிழும் நான், நீ பிரியப் பெரிதும் வாடுகிறேன். அது காணும் இவ்வூரார் உன்னைப் பழிக்கின்றனர். ‘ஒருத்தி வருந்த, ஒருத்தியிடத்தே மகிழ்ந்து வாழ்கிறான்!’ என ஊரார் உரைக்கும் அவ்வலர் உரை ஒன்றிற்கே வருந்துகிறது என் உள்ளம், அன்ப! இவ்வாறு வரும் வருகையின் போதும், உன் உடல் ஈங்கு இருப்பினும், உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/26&oldid=1129418" இலிருந்து மீள்விக்கப்பட்டது