பக்கம்:மருதநில மங்கை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை25


நினைவெல்லாம் பரத்தையர் சேரிக்கண் சென்று திரிகிறது. இவ்வாறு என்பால் உள்ளன்பின்றி வாழும் உன் உறவால் நான் பெறலாகும் இன்பம், கனவில் கண்ட செல்வம் போல் கைகூடப் பெறாது. பயன் நிறைந்ததும் ஆகாது. ஆகவே, அன்ப! உன்னை ஏற்றுக் கொள்வதில் மகிழ்ச்சி கொண்டிலது என் மனம்!” எனக் கூறி ஏற்றுக் கொண்டாள். அவ்வாறு ஏற்றுக் கொள்ளுமுகத்தான், அவன் ஒழுக்கக் கேட்டினையும், அதனால் ஊரார் கூறும் அலரையும், அதனால் அவனுக்குண்டாம் புகழ்க் கேட்டினையும் அவளுக்கு உண்டாம் இன்பக் கேட்டினையும் எடுத்துக்காட்டித் திருத்திய திறம் அறிந்து மகிழ்தற்குரியதாம்.

“பொதுமொழி பிறர்க்குஇன்றி முழுதாளும் செல்வர்க்கு
மதிமொழி இடன்மாலை வினைவர்போல் வல்லவர்
செதுமொழி சீத்த செவி செறுவாக
முதுமொழி நீராப், புலன்நா உழவர்,
புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனல்ஊர! 5

ஊரன்மன் உரன்அல்லன் நமக்கு என்ன உடன்வாளாது,
ஓருர்தொக்கிருந்த நின்பெண்டிருள் நேராகிக்,
களையா நின்குறிவந்து, எம்கதவம் சேர்ந்து அசைத்தகை
வளையின்வாய் விடன்மாலை மகளிரை நோவேமோ?
கேளலன் நமக்கு அவன் குறுகன்மின் எனமற்றெம் 10
தோளொடு பகைபட்டு நினைவாடு நெஞ்சத்தேம்;

ஊடியார் நலம்தேம்ப ஒடியெறிந்தவர் வயின்
மால்தீர்க்கும் அவன்மார்புஎன்று எழுந்தசொல் நோவேமோ?
முகைவாய்த்த முலைபாயக் குழைந்தநின் தார்எள்ள
வகைவரிச் செப்பினுள் வைகிய கோதையேம்; 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/27&oldid=1129425" இலிருந்து மீள்விக்கப்பட்டது