பக்கம்:மருதநில மங்கை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32புலவர் கா. கோவிந்தன்


தெள்அரிச் சிலம்புஆர்ப்பத் தெருவின்கண் தாக்கி, நின்
உள்ளம்கொண்டு ஒழித்தாளைக் குறைகூறிக் கொளநின்றாய்,
துணிந்தது பிறிதாகத், துணிவிலள் இவள் எனப் 10
பணிந்தாய் போல்வந்து, ஈண்டுப், பயனில மொழிவாயோ?

பட்டுழி அறியாது பாகனைத் தேரொடும்
விட்டு, அவள் வரல்நோக்கி, விருந்தேற்றுக்கொள நின்றாய்.
நெஞ்சத்த பிறவாக, நியிைலள் இவள் என
வஞ்சத்தான்்வந்து, ஈங்கு வலியலைத்து ஈவாயோ? 15

இணர்தகை தண்காவின் இயன்ற நின்குறிவந்தாள்
புணர்வினில் புகன்று, ஆங்கே புனல்ஆடப் பண்ணினாய்;
தருக்கிய பிறவாகத் தன்னிலள்இவள், எனச்
செருக்கினால் வந்து, ஈங்குச்சொல் உகுத்துஈவாயோ?

என வாங்கு, 20
தருக்கேம் பெரும! நின் அல்கல் விருப்புற்றுத்
தாழ்ந்தாய் போல்வந்து தகவில செய்யாது,
சூழ்ந்தவைசெய்து, மற்று எமையும் உள்ளுவாய்,
வீழ்ந்தார் விருப்பு அற்றக்கால்.”

பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைவனொடு ஊடித் தலைவி கூறியது.

1. போது–அரும்புகள்; அவிழ்–மலர்கின்ற; புதுவது– புதிதாக; தளைவிட்ட–மலர்ந்த; 3. வதுவை–திருமணம், கலிங்கம்– ஆடை; 5. ஒது–வேதம்; 6.ஆய்–அழகிய; தூவி– இறகு; 7. மேதக–பெருமையாக; 8. தெள்–தெளிந்த; அரி– உள்ளிடுபரல்கள்; தாக்கி–எதிர்ப்பட்டு; 9. குறைகூறி– உன்குறையைக் கூறி; 10. துணிந்தது– கருதியது, துணிவு– தனக்கே உரித்தாக வரைந்து கொண்ட ஒழுக்கம்; 12. பட்டுழி– சென்றவிடம்; 13.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/34&oldid=1129441" இலிருந்து மீள்விக்கப்பட்டது