பக்கம்:மருதநில மங்கை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை39


நேரிழை நல்லாரை நெடுநகர்த் தந்துநின்,
தேர்பூண்ட நெடுநன்மான் தெண்மணி வந்து எடுப்புமே,

எனவாங்கு,
மெல்லியான் செவிமுதல், மேல்வந்தான் காலைபோல் 20
எல்லாம் துயிலோ எடுப்புக; நின்பெண்டிர்
இல்லின் எழீஇய யாழ் தழீஇக், கல்லாவாய்ப்
பாணன் புகுதராக் கால்.”

பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனுக்கு வாயில் மறுக்கும் தோழி கூறியது இது.

1. மணி–நவமணிகள்; 2. அடை–இலை; மறைத்தென–மறைத்துக் கொண்டதாக; 3. கதுமென–விரைவுப் பொருள் குறிக்கும் ஒரு குறிப்புச் சொல்; 4. மதி நீழல்–திங்களின் நிழலை; அதுவென்–சேவல் அன்னமாகக் கருதி; 5. துன்ன–நெருங்கிவர; 6. பழனம்–வயல்கள்; 8. படாத–உறங்காத; இயைய ஆல்–இமை பொருந்து தலும் கூடும்; 9. கோதையார்–பரதையர்; வைகலும்–நாள் தோறும்; 10. ததும்பும்–ஒலிக்கும்; எடுக்கும்–கலைக்கும்; 11. ஓவா–ஓயாத; 12. பொருந்துதல்–உறக்கம் கொள்ளுதல்; 14. தமர்–உறவினராய பரத்தையர்; துணங்கை –ஒருவகைக் கூத்து; அரவம்–ஒலி; 16. நீரிதழ்–நீர் நிறைந்த மலர்போலும்; புலராக்கண்–நீர் அறாத கண்கள்; கூம்பு–குவிய; 19. மான்–குதிரை; தெண்மணி–தெளிந்த மணி ஓசை; 20. மெல்லியான்–படையின்றி மெலிந்து அரணுள் அடங்கி இருப்பவன்; மேல்வந்தான்–படையொடு முற்றியிருப்பவன்; காலைபோல்–காலை முரசொலி போல்; 21. எல்லாம்–நின் திருவிளையாடல்களெல்லாம்; 22. கல்லா–யாழிசைத்தல் தவிர வேறு எதையும் அறியாத.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/41&oldid=1129466" இலிருந்து மீள்விக்கப்பட்டது