பக்கம்:மருதநில மங்கை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6


அலர் மார்பு காணிய

னங்கொண்ட மனைவி, மனையின்கண் கிடந்து வருந்த, ஓர் இளைஞன் பரத்தையர் சேரி சென்று வாழ்ந்திருந்தான். ஆங்கு, இளமை நலம் குன்றாமல் வாழும் இளம் பரத்தையர்களாகத் தேடிப் பிடித்து, அவர்பால் பேரின்பம் உற்று, மேலும் அத்தகையர் பலரைப் பெற்று மகிழ வேண்டும் எனும் ஆசையால், அப் பரத்தையர் சேரியை விடுத்து வரும் மனமின்றி, ஆங்கேயே வாழ்ந்திருந்தான்.

அவன் ஒழுக்கக் கேட்டை உணர்ந்து, அதனால் அவனுக்கும், தனக்கும் உண்டாம் புகழ்க் கேட்டை எண்ணி வருந்தினாள் அவன் மனைவி. அவன் பரத்தைமை ஒழுக்கத்தை, அவனுக்கு வேண்டியவரிடமெல்லாம் கூறி வருந்தினாள். அவன் ஒழுக்கக் கேட்டிற்குத் துணை புரியும் அவன் பாகனையும், பாணனையும் பழித்தாள். ஒருநாள் அவளைக் கண்ட தேர்ப் பாகன், “அம்மையே! உம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/42&oldid=1129467" இலிருந்து மீள்விக்கப்பட்டது