பக்கம்:மருதநில மங்கை.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
52புலவர் கா. கோவிந்தன்
 


நாடி நின்தூது ஆடித், துறைச்செல்லாள், ஊரவர்
ஆடைகொண்டு ஒலிக்கும் நின்புலைத்தி காட்டு என்றாளோ?
கூடியார் புனல்ஆடப் புணையாய மார்பினில் 15
ஊடியார் எறிதர ஒளிவிட்ட அரக்கினை

வெறிது நின்புகழ்களை வேண்டார்இல் எடுத்துரத்தும்
அறிவுடை அந்தணன் அவளைக் காட்டு என்றானோ?
களிபட்டார் கமழ்கோதை கயம்பட்ட உருவின்மேல்,
குறிபெற்றார் குரற்கூந்தல் கோடுளர்ந்த துகளினை, 20

என வாங்கு,
செறிவுற்றேம், எம்மைநீ செறிய, அறிவற்று
அழிந்துஉகு நெஞ்சத்தேம்; அல்லல் உழப்பக்
கழிந்தவை உள்ளாது, கண்டவிடத்தே

அழிந்து நிற்பேணிக் கொளலின், இழிந்ததோ, 25
இந்நோய் உழத்தல் எமக்கு?”

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்கு வாயில் மறுக்கும் தலைவி கூறியது இது.

1. இணை-பலவகை, நிவந்த-உயர்ந்த சேக்கை-படுக்கை; 3. சேடுஇயல்-பெருமை மிக்க, வள்ளம்-கிண்ணம், 6. நீர-நீரை உடைய புதல்-புதர், ஒற்ற-அலைக்க 6. வான்மலர்-வெண்ணிற மலர்;8. வடி-மாம் பிஞ்சு,9. கண்ணி-கருதி, கனைதொறும்-தழுவும் தொறும் 11. உடன்றவர்-கோபித்த பரத்தையர், 12. மேனாள்பின்னாள் நகை-பல் செய்த குறி, 14 ஒலிக்கும்-வெளுக்கும்; புலைத்தி-வண்ணாத்தி, 16. அரக்கு- சாதிலிங்கக் குழம்பு; 17, வெறிது-பயன் இல்லாமல்; 18. அவளை-அவளுக்கு: 19. களிபட்டார்-புணர்ந்து மகிழ்ந்தவர் கயம்பட்ட-மென்மை அடைந்த, 20. கோடு உளர்தல்-மயிரைச் சிக்குப் போக வாரி முடித்தல்; 22.

செறிவுற்றேம்-மனம் நிறைவுற்றேம்:23. உகு-வருந்துகின்ற.