பக்கம்:மருதநில மங்கை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56புலவர் கா. கோவிந்தன்


"அன்ப! ஆற்றில் பெருகி ஓடும் வெள்ள நீர் அனைத்தும் புகுந்தாலும் நிறைவுறாத கடல்போல், உன் நலத்தை, ஒரு நாளும் இழக்காமல், ஓயாது பெறினும், தம் ஆசை அடங்காது, அதனால் உன்னை இடைவிடாது பெற விரும்பி, அந் நிலையில் வாய்க்காது போகும் காலத்தில், உன்னோடு ஊடித் துயர் கொள்ளும், அப் பரத்தையர் ஊடல் தீர்க்க, எதை வேண்டுமாயினும் கூற, அவர்பால் செல்வாயாக. நான், நீ கூறும் எத்தகைய பெரிய பொய்யையும் எளிதில் நம்பி, உன்னை ஏற்றுக் கொள்ளும் உள்ள உறுதி இழந்தவள். ஆகவே, என்னை எப்பொழுது வேண்டுமாயினும் தேற்றித் தெளிவிக்கலாம். அதற்காக ஈங்குக் காத்திராது, அவரைத் தேற்ற ஆங்கு விரைந்து செல்க!” எனக் கூறி, வாயில் அடைத்து வழி மறித்தாள்.

“அகன்துறை அணிபெறப் புதலொடு தாழ்ந்த
பகன்றைப்பூ உறநீண்ட பாசடைத் தாமரை,
கண்பொர ஒளிவிட்ட வெள்ளிய வள்ளத்தால்
தண்கமழ் நறும்தேறல் உண்பவள் முகம்போல
வண்பிணி தளைவிடுஉம் வயல்அணி நல்ஊர! 5

நோதக்காய் எனநின்னை நொந்தீவார் இல்வழித்,
தீதிலேன் யான் எனத் தேற்றிய வருதிமன்;
ஞெகிழ்தொடி இளையவர் இடைமுலைத் தாதுசோர்ந்து இதழ்வனப்பிழந்த நின்கண்ணி வந்து உரையாக்கால்

கனற்றிநீ செய்வது கடிந்தீவார் இல்வழி; 10
மனத்தில் தீதிலன் என மயக்கிய வருதிமன்,
அலமரல் உண்கண்ணார் ஆய்கோதை குழைத்தநின்
மலர்மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையாக்கால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/58&oldid=1129490" இலிருந்து மீள்விக்கப்பட்டது