பக்கம்:மருதநில மங்கை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை57



என்னைநீ செய்யினும் உரைத்திவார் இல்வழி
முன்அடிப் பணிந்து எம்மை உணர்த்திய வருதிமன்; 15
நிரைதொடி நல்லவர் துணங்கையுள் தலைக்கொள்ளக்
கரையிடைக் கிழிந்தநின் காழகம் வந்துரையாக்கால்

என வாங்கு,
மண்டுநீர் ஆரா மலிகடல் போலும்நின்

தண்டாப் பரத்தை தலைக்கொள்ள நாளும் 20
புலத்தகைப் பெண்டிரைத் தேற்றி, மற்றுயாம் எனின்,
தோலாமோ நின்பொய் மருண்டு?”

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்கு வாயில் மறுக்கும் தலைவி கூறியது இது.

1. பாசடை–பசிய இலையோடு கூடிய; 3. கண்பொர–கண் கூசுமாறு; 5. நொந்தீவார்–வெறுப்பவர்; 8. ஞெகிழ்தொடி–கழலும் தொடி; 10. கனற்றி–உள்ளத்தை வருத்தி; கடிந்தீவார்–கடிவார் 14. என்னை–எத்தகைய பெரிய கொடுமையை; 17. காழகம்–ஆடை, 19. மண்டுநீர்–பெருவெள்ளம்; ஆரா–நிறையாத, 20. தண்டா–ஆசை அடங்காத; 21. புலத்தகை–புலக்கும் இயல்புடைய; தேற்றி–தெளிவிப்பாயாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/59&oldid=1129858" இலிருந்து மீள்விக்கப்பட்டது