பக்கம்:மருதநில மங்கை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60புலவர் கா. கோவிந்தன்


அவ்வாறு பழித்தல், பண்புடையார்க்குப் பெருமை தராது என உணர்த்திற்று அவள் அறிவு. அதனால், “அன்ப காலையில் எழுந்த வண்டு, முதற்கண் பொய்கையுள் புகுந்து, ஆங்குப் புதிதாக மலர்ந்திருக்கும் மலர்களில் உள்ள தேனைக் குடித்து, நண்பகற் காலம் வந்ததும், அதை மறந்து கழியை யடைந்து ஆங்கு மலர்ந்து, மணக்கும் நெய்தலிற் படிந்து, அவற்றின் தேனை உண்டு, இரவு வந்துற்றதும், தாமரை மலரைத் தேடி அடைந்து, அதன் பொகுட்டினுள் அடங்கும் வளம் மிகுந்தது உன் நாடு!” என அவன் நாட்டையும் அவன் நாட்டு வண்டையும் வாயாரப் புகழ்வாள் போல், அவன் ஒழுக்கக் கேட்டை, அவ்வண்டின் மீது ஏற்றிப் பழித்தாள்.

மனைவி, தன் நாட்டு வளத்தைப் பாராட்டியது, தன்னைப் பழிப்பதற்கே என்பதை அவன் உணர்ந்து கொண்டனாயினும், அதை உணராதான்போல், அவளை நோக்கிப், “பெண்ணே! நான் வந்து உன் வாயிற்கண் நிற்கின்றேன். என்னை வரவேற்பதை விடுத்து, இக்காலத்திற்கும், இவ்விடத்திற்கும் பொருந்தாத எதை எதையோ கூறகின்றனையே, நீ என்ன பித்தேறினையோ!” என்று வினவினான்.

பிழை புரிந்தவன் அவனாகவும், அதை மறைத்து விட்டு, அவள் பிழையை நாகரிகமாக எடுத்துக் காட்டும் நம்மைப் பழிக்கின்றனனே என எண்ணிச் சினந்தாள் அவன் மனைவி. சினம் மிகவே, அவன் பிழைகளை, இனி நாகரிகமாக எடுத்துக் கூறிப் பயன் இல்லை என உணர்ந்தாள். அதனால், “ஐய! பித்தேறினவள் நான் மிட்டும் அல்லேன். அன்பு நெறியையும், அறநெறியையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/62&oldid=1129499" இலிருந்து மீள்விக்கப்பட்டது