பக்கம்:மருதநில மங்கை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62புலவர் கா. கோவிந்தன்



முன்பகல் தலைக்கூடி, நண்பகல் அவள்நீத்துப், 10
பின்பகல் பிறர்த்தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய்;

என வாங்கு,
கிண்கிணி மணித்தாரோடு ஒலித்துஆர்ப்ப, ஒண்தொடிப்,
பேரமர்க் கண்ணார்க்கும் படுவலை.இது, என
ஊரவர் உடன்நகத் திரிதரும் 15
தேர் ஏமுற்றன்று நின்னினும் பெரிதே.”

பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனுக்கு வாயில் மறுக்கும் தலைவி கூறியது இது.

2. தாது–தேன்; அமர்ந்து–விரும்பி; ஆடி–உண்டு; பாசடைச் சேப்பு–பசிய இலைகளைக் கொண்ட தான்தோன்றி எனும் கிழங்குவகை; 4 மைதபு–குற்றம் அற்ற; கிளர்–விளங்கும்; கொட்டை–தாமரைப் பொகுட்டு; 5. கொய்குழை–கொய்த தளிர்கள்; அகை–துளிர்க்கும்; 7. ஏமுற்றான்–பித்தேறினான்; 8. செகுத்தல்–அழித்தல்; உண்டாங்கு–உண்டது போல்; 11. நெஞ்சமும்–நெஞ்சை உடைய நீயும்; 15. தேர்–ஈண்டுத் தேர்ப்பாகன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/64&oldid=1129859" இலிருந்து மீள்விக்கப்பட்டது