பக்கம்:மருதநில மங்கை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை67


நான் ஊடியதால் அன்றோ, அவன் இவ்வாறு பொய்யும் பொய்ச் சூளும் கூறினான். என்னால், அவன் பொய்ச் சூள் உரைத்துப் பொல்லாங்கு அடைதல் பொருந்துமோ? அது அவனையும், அவனோடு தொடர்பு கொண்ட என்னையும் அழித்துவிடுமே எனும் அச்சம், என் உள்ளத்தில் எழ, அவன்மீது கொண்ட கோபம் என்னை விட்டு அகன்றது. ஊடலைக் கைவிட்டேன். உவந்து ஏற்றுக் கொண்டேன்.

“தோழி! ஒரு நாள் இரவு அவன் வந்து சேர்ந்தான். ‘பகற் காலமெல்லாம் பரத்தையர் பின் திரிந்துவிட்டு, இப்பொழுது ஏன் இங்கு வந்தாய்?’ என இடித்துக் கூறி வெறுத்து, அவனோடு மேலும் வாய் திறவாது வந்து விட்டேன். என் ஊடல் கண்டு உள்ளம் நொந்த அவன், உடனே என் அருகில் ஆடிக் கொண்டிருந்த தன் மகனை எடுத்துக் கொண்டு சென்றான். அவனைத் தன் மார்பில் அனைத்தவாறே படுத்துக் கொண்டான். ஆனால், உறக்கம் கொண்டிலன். பொய்யாக உறங்குவான்போல் கண்மூடி வருந்திக் கிடந்தான். அந் நிலையில் அவன் வருந்திக் கிடப்பதைக் கண்டு கலங்காதிருக்க முடியவில்லை என்னால், கலங்கினேன். மேலும் மகன் முன் நாங்கள் மாறுபட்டிருப்பது, அம்மகனின் இளம் தூய உள்ளத்தைப் பாழ்படுத்துமே எனும் நினைவும் எழுந்தது. அவன் கொடுமையை மறந்தேன். அவனை ஏற்றுக் கொண்டேன்.

“தோழி! இவ்வாறு, விருந்தோம்பும் இல்லறக் கடமையும், பொய்ச்சூள் பெருங்கேடாம் என அறமல்லன. கண்டு அஞ்சும் அச்சமும், மகனைத் தழுவிக் கிடக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/69&oldid=1129513" இலிருந்து மீள்விக்கப்பட்டது