பக்கம்:மருதநில மங்கை.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மருதநில மங்கை69
 

'வாடிய பூவொடுவாரல் எம்மனை' என
ஊடி இருப்பேனாயின், நீடாது,
அச்சு ஆறாக உணரிய வருபவன் 20
பொய்ச்சூள் அஞ்சிப் புலவேன் ஆகுவல்;

'பகல்ஆண்டு அல்கினை பரத்த!' என்றுயான்,
இகலி இருப்பேனாயின், தான்தன்
முதல்வன் பெரும்பெயர் முறையுளிப் பெற்ற
புதல்வன் புல்லிப் பொய்த்துயில் துஞ்சும், 25

ஆங்க,
விருந்து எதிர்கொள்ளவும், பொய்ச்சூள் அஞ்சவும்,
அரும்பெறற் புதல்வனை முயங்கக் காணவும்
ஆங்கு அவிந்து ஒழியும் என்புலவி; தாங்காது

அவ்வவ் இடந்தான் அவை அவை காணப் 30
பூங்கண் மகளிர் புனைநலம் சிதைக்கும்
மாய மகிழ்நன் பரத்தைமை
நோவேன் தோழி! கடன் நமக்கு எனவே.”

'பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனை விடாதே ஏற்றுக் கொள்கின்றாய்; அதை நான் பொறேன்!' எனத் தோழி கூறத் தலைவி அதற்குக் காரணம் கூறியது. இது.

1. ஆர்-நிறைந்த, செறு-வயல்; 2. கொண்மார்-கொண்டு வருதற் பொருட்டு, 3. இழை-ஈண்டுச் சிலம்பு; 4. ஒரை மகளிர்விளையாட்டுப் பெண்கள்; ஓதை- ஆரவாரம்; வெரீஇ-அஞ்சி; 5. ஆர்கை-உண்ணும் தொழில் மேற்கொண்ட; அம்சிறைத் தொழுதி-அழகிய இறகுகளை உடைய நாரைக் கூட்டம்; 6. பொங்கர்-சோலை; 7. அலப்பிய-அலைத்த; 10. வெய்யன்-விருப்பம் உடையன்; 11. வதுவை நாள்-திருமண நாள்; நாள்தோறும் திருமணநாளே ஆயினன் என்க. 13. உறுவோய்-துன்புறுவோய்; 14.