பக்கம்:மருதநில மங்கை.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
72புலவர் கா. கோவிந்தன்
 

உடனே கழியில் இறங்கிக், கணப் பொழுதில் அவளுக்கு வேண்டும் கோரைகளைப் பறித்துத் தந்தான். அவன் செய்த நல்ல துணைக்கு நன்றி தெரிவிக்கும் கருத்தோடு அவனைத் தலை நிமிர்ந்து நோக்கினாள். அவன் பேரழ கைக் கண்டாள். காதல் கொண்டாள். அவன் நிலையும் அஃதே.

மற்றொரு நாள், அவளும் அவள் தோழியரும் மலர் பறிக்கச் சென்றனர். கோட்பூ, கொடிப்பூ முதலிய மலர்களைப் பறித்தனர். அல்லி தாமரை முதலாம் நீர்ப் பூக்களைப் பறிக்க விரும்பினர். ஆனால், அப்பூக்கள் ஆழமான இடத்தில் மலர்ந்திருக்கக் கண்டு அஞ்சிக் கரையேறினர். அவ்வூர்த் தலைவன் மகளைக் கண்டு காதல் கொண்ட அந்நாள் முதலாக, அம்மகளிரைப் பின் தொடர்ந்து திரியும் அவ்விளைஞன், அதைக் கண்டான். உடனே நீரில் இறங்கினான். நீந்திச் சென்று, அம்மலர் களைப் பறித்துக் கொடுத்தான். வேறு ஒருநாள், அப்பெண் தனித்து ஒரிடத்தில் அமர்ந்திருந்தாள். அவள் அருகில் தொய்யிற் குழம்பும் அது தீட்டும் கோலும் இருந்தன. அந்நிலையில், ஆங்கு வந்த அவன், அவளையும், அவள் அருகிற் கிடக்கும் தொய்யிற் குழம்பையும் கண்டான். அவள் தோள், தொய்யில் எழுதப் பெறாமல், வறிதே இருப்பதையும் அறிந்தான்். உடனே, அவள் அருகில் அமர்ந்தான். அவள் முன் கையைப் பற்றி, அவள் தோளில் கரும்பு போலும் ஒவியங்களைத் தீட்டி மகிழ்ந்தான். இவ்வாறு வளர்ந்தது அவர் காதல்.

அவர் காதலை, அவ்வூர் வாழும் சிலர் அறிந்தனர். அவருள்ளும் சிலர், ஊர்வம்பு பேசுவதையே வழக்கமாகக்