பக்கம்:மருதநில மங்கை.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மருதநில மங்கை73
 

கொண்டவர். அது பேசாதிருந்தால், அவருக்குப் பொழுதே போகாது. அவர் இயல்பு அறிந்த அவ்வூரினர். அவர்களைப் பொருட் படுத்துவதுமில்லை. அவர்களுக்குத் தெரிந்து விட்டது இவர்கள் காதல், அவர்கள் அதைக் கூட்டியும் குறைத்தும், அழித்தும் பழித்தும் பலவாறு கூறித் துரற்றத் தொடங்கினர்.

அவர்கள் கூறும் அப்பழி உரையை, அப்பெண்ணின் உயிர்த் தோழி கேட்டாள். அவர்கள் காதலை அவளும் குறிப்பால் அறிந்திருந்தாள். நாள்தோறும், அவளும் தானும் பிற தோழியரும் ஒன்று கூடி ஆடும் இடந்தோறும் அவர்களை விடாது, இளைஞன் ஒருவன் தொடர்ந்து வருவதையும், வந்து அவர்கள் ஆட்டத்தைப் பார்த்திருப்பவன், ஆட்டத்தில் அப்பெண்ணின் அணியும் ஆடையும் நிலைபிறழக் கண்டு, அவற்றை ஒழுங்கு செய்து விட்டதையும், அம்மகளிர் புனலாடுங்கால், அவர்க்கு அப் புனலாற் கேடு ஏதும் நேராவாறு, அவ்விடத்தைச் சுற்றிச் சுற்றி வந்து காவல் புரிந்ததையும், அப்பெண் விரும்பும் தொய்யில் எழுதியும், மகளிர் மணல் வீடுகட்டி விளையாடப் புகுங்கால், அவர்க்குத் துணையாய், அவர் விடும் குற்றேவல்களை விரும்பிச் செய்தும், அவர் நட்பைப் பெற விரும்பியதையும், அது எளிதில் கிடைக்கப் பெறாமையால் பெரிதும் வருந்திச் சென்றதையும், அவள் அறிந்திருந்தாள். அதனால், அவனுக்கும் அவளுக்குமிடையே காதல் தோன்றி வளர்கிறது என்பதை அறிந்திருந்தாளாயினும், அப்பெண், அது குறித்து எதுவும் கூறாமையால், அவளும், அவளை ஏதும் கேட்டிலள்.

ஆனால், இப்பொழுது நிலைமை வேறாயிற்று. அவர் காதலை ஊரார் உணர்ந்து கொண்டனர். ஊரில் அலர்