பக்கம்:மருதநில மங்கை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை75


திருந்து காவல் புரிகின்றனர். அதை நீ அறிவாய். அவர்கள் காவலும் பயனற்றதாகி விட்டது எனக் கருதி என்னை வந்து வினவுகின்றாய். உன்னை என்னென்பது?” என்று கூறி மறுத்தாள்.

நானும், பெண்மையும் தடை செய்ய, இவ்வாறு மறுத்துரைத்தாளைனும், அத் தோழியின் துணை பெற்றாலன்றித் தன் காதல் நிறைவேறாது என்பதை உணர்ந்து, அதை ஒப்புக் கொள்ள உறுதி கொண்டாள். அதனால், தோழியை நோக்கித், ‘தோழி, இனி, நான் எதைக் கூறினும், இவ்வூரார் அதை ஏற்றுக் கொள்ளார். ஆகவே, என் திருமணக் காலத்தில், இவ்வூரார் ஒன்று கூடி, அன்று எதைச் செய்ய விரும்புகின்றனரோ, அதை, இன்றே செய்து முடிக்கட்டும். அவ்வாறு செய்யும் இவ்வூரார்க்கு, நாம் செய்யக் கூடியது என்ன? அதை நீ ஆராய்ந்து கூறு!” என வல்லமையாய்க் கூறித், தன் காதல் ஒழுக்கத்தை ஒருவாறு ஒப்புக் கொண்டு உண்மை உரைத்தாள்.

“புனைஇழை நோக்கியும், புனல்ஆடப் புறம்சூழ்ந்தும்,
அணிவரி தைஇயும், நம்இல்வந்து வணங்கியும்,
நினையுபு வருந்தும் இந்நெடுந்தகை திறத்து, ‘இவ்வூர்,
இனையள்என்று எடுத்துஒதற்கு அனையையோ நீ!’ என
வினவுதி ஆயின், விளங்கிழாய்! கேள்இனி; 5

செவ்விரல் சிவப்புஊரச், சேட்சென்றாய் என்றுஅவன்,
பெளவநீர்ச் சாய்க்கொழுதிப் பாவைதந்தனைத்தற்கோ,
கெளவைநோய் உற்றவர், காணாது கடுத்தசொல்
ஒவ்வா என்று உணராய்நீ, ஒருநிலையே உரைத்ததை!

ஒடுங்கி யாம்புகல் ஒல்லேம் பெயர்தர அவன் கண்டு 10
நெடும் கயமலர் வாங்கி நெறித்துத் தந்தனைத்தற்கோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/77&oldid=1129638" இலிருந்து மீள்விக்கப்பட்டது