பக்கம்:மருதநில மங்கை.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
76புலவர் கா. கோவிந்தன்
 


விடுத்தவர் விரகுஇன்றி எடுத்தசொல் பொய்யாகக் கடிந்ததும் இலையாய் நீ கழறிய வந்ததை

வரிதுஎற்றாய்நீ என வணங்குஇறை அவன்பற்றித்
தெரிவேய்த்தோள் கரும்புஎழுதித் தொய்யில் செய்தனைத்
புரிபு நம்ஆயத்தார் பொய்யாக, எடுத்த சொல் [தற்கோ 15
உரிதுஎன, உணராய்நீ உலமந்தாய் போன்றதை?

என வாங்கு,
அரிது.இனி, ஆய்இழாய் ! அதுதேற்றல்; புரிபுஒருங்கு
அன்றுநம் வதுவையுள் நமர்செய்வது இன்று ஈங்கே 20
தான் நயந்து இருந்தது இவ்வூராயின், என்கொலோ
நாம் செயற்பாலது இனி?”

தலைவி, தோழிக்கு அறத்தோடு நின்றது. இது. திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே (தொல்பொருள்; 128) என்னும் விதியால், மருதத்தில் குறிஞ்சி வந்தது.

1. நோக்கியும்-திருத்தியும் 2. வரி-தொய்யில்; இல்-மணல் வீடு; 3. நினையு-காதலை நினைந்து; 4. இணையள்-இன்ன உறவு உடையள்; அணையையோ-அவ்வியல்பு உடையையோ; 6. சேட் சென்றாய்-நெடும் பொழுது நின்றாய்; 7. பெளவம்-கடல்; சாய்-தண்டான் கோரை கொழுதி-பறித்துக் கோத; 8. கெளவை நோய் உற்றவர்-அலர் உரைக்கும் நோயுடையவர்; காணாது-பொருந்தாது என்று உணராது; 9. ஒருநிலையே-அவர்கள் கருதியவாறே; 10. ஒடுங்கி-அஞ்சி; 12. விடுத்தவர்-ஊராரால் வெறுத்து விடப்பட்டவர்; விரகு-அறிவு; 13. கழறிய-கோபித்தற்கு; 14. இறை-முன் கை; 15. தெரிவேய்-ஆராய்ந்த அழகிய மூங்கில் போலும்; 16. புரிபு-காவல் புரியும்; 17. உணராய்-உரிது என மாற்றுக-உணராது, அது ஒக்கும் எனப் பொருள் கொள்க; உலமந்தாய்-வருந்தினாய்; 19. புரிபுஒருங்கு-ஒருங்கே விரும்பி.