பக்கம்:மருதநில மங்கை.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
80புலவர் கா. கோவிந்தன்
 

பின்னர், “அன்ப! நீ என்னைப் பிரியாதிருக்க வேண்டும். நான் இழந்த என் நலனை மீண்டும் பெற வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. ஊரார் உரைக்கும் பழி ஒழிந்தால் போதும் என்றே எண்ணுகிறேன். என் கண்கள் கவலையற்று உறங்க வேண்டும். அதற்கு, நீ என்னை அகலாதிருத்தல் வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. பரத்தையர் என்பால் வந்து, உன்னைப் பற்றிக் குறை கூறுதல் ஒழிந்தால் போதும் என்றே ஆசைப்படுகிறேன். அன்ப! கூந்தலை வாரி முடித்து, மலர் சூட்டி மகிழ நான் விரும்பவில்லை. உன்னைத் தேடிப் பாணன் என் வீட்டிற்கு வாராதிருத்தல் வேண்டும் என்றே விரும்புகிறது என் உள்ளம்!” என்று கூறிப் புலந்தாள்.

அவள் அவ்வாறு கூறிப் புலந்தாளேனும், அவள் நெஞ்சு அவனை ஏற்றுக் கொள்ளத் துடித்தது. நெஞ்சின் துடிப்பையும், அதை அடக்கி ஆளுதல் தன்னால் ஆகாது என்பதையும் அறிந்தாள். அதனால் அதுகாறும் ஊடியிருந்து அவனுக்கு வாயில் விட மறுத்தவள், அவனை நேர்க்கி, “அன்ப! பரத்தை வீடு சென்று பழிகொண்டு நிற்கும் உன்னைக் கண்டும், எனக்குத் துணையாய் என்பால் தங்குவதை விடுத்து, உன்பால் வந்து உன் ஏவல் வழி நிற்கத் துடிப்பதோடு, என்னையும் உன் வயத்தளாக்க வற்புறுத்துகிறது என் நெஞ்சம். ஐய! என்னுடன் வாழ்ந்தும், எனக்கே பகையாகும் இந்நெஞ்சைத் துணையெனக் கொண்ட என்னால், உன்டால் காதல் கொள்ளப் பண்டு தூண்டிய உன்மார்ப்பைத் தழுவேன் எனக் கூறிப் புலத்தலும், புலந்த அந் நிலையிலேயே