பக்கம்:மருதநில மங்கை.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


13


கையான் மலர்ந்த முகை


மைதி நிலவிய ஒரு நாட்டில் மக்கள் மகிழ்ந்து வாழ்ந்திருந்தனர். ஒருநாள் பகையரசன் படையொன்று, அந்நாட்டில் திடுமெனப் புகந்து, யாழ்செய்யத் தொடங்கி விட்டது. அந்நாட்டில் நல்வாழ்வு வாழ்தல் இனி இயலாது எனக் கருதிய அந்நாட்டுக் குடிமக்கள் அந்நாட்டை விட்டகன்று, நல்லாட்சி நிலவும், வேறு ஒரு நாட்டைத் தேடி அடைந்து, ஆங்கு வாழ்வு மேற்கொண்டனர். அவர்கள் ஆண்டு வாழினும், தாய்நாட்டுப் பற்று அவர்களை விட்டகலவில்லை. அவர் உள்ளம் தாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த் தம் நாட்டை மறவாது எண்ணியிருந்தது. நாட்கள் சில கழிந்தன. அழிந்த நாட்டிற்குரிய அரசன், தன் படைத் துணையால், பகைவரை வென்று ஒட்டினான். நாட்டில் மீண்டும் அமைதி நிலவிற்று. அஃது அறிந்த அக்குடிகள், மீண்டும் தம் நாடடைந்து மகிழ்ந்து வாழ்ந்தனர்.