பக்கம்:மருத்துவக் கலைச் சொற்கள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

- மாக பல்கலைக் LAR தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் - 613 005 - இந்தியா முனைவர் இ. சுந்தரமூர்த்தி துணைவேந்தர் அணிந்துரை இன்றைய அறிவியலின் பன்முக வளர்ச்சியின் பயனாகப் பல்வேறு கலைச்சொற்கள் உருவாக்கம் பெற்று வருகின்றன. அறிவியலின் கூறுகளைப் பரந்துபட அறிவதற்கு இக்கலைச் சொற்கள் பெரிதும் துணை நிற்கின்றன. இதுபோலவே அறிவியலின் முக்கியக் கூறுகளில் ஒன்றான மருத்துவம் குறித்த கலைச்சொற்களும் மக்களின் நல்வாழ்வுக்கான அடிப்படையாக அமைகின்றன. இவ்வகையில் முனைவர் நே.சோசப் அவர்கள் தொகுத்த மருத்துவக் கலைச்சொற்கள் என்னும் நூல் இன்றைய அறிவியல் தமிழ்ச்சூழலுக்கு நல்வரவாய் அமையக்கூடும். அன்றாட வாழ்வில் பயன்தரக்கூடிய சுமார் , 8000 மருத்துவக் கலைச்சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. தொன்றுதொட்டே வழங்கப்பட்டு வருகின்ற அரிய கலைச்சொற்கள் பல, இந்நூலில் இடம் பெற்றிருப்பது பாராட்டிற்குரியதாகும். தமிழில் மருத்துவத்தை எழுதுகின்றவர்களுக்கு இந்நூல் பெரிதும் பயன்படும். தவிர மருத்துவர்களுக்கும், மக்களுக்கும் பயன்தரும் வண்ணம் உருவாக்கிய முனைவர் நே. சோசப் மிகவும் பாராட்டுக்குரியவர். நூலாசிரியருக்கும் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத் துறையினருக்கும் பாராட்டுதல்கள். மருத்துவ அறிவியலின் புதிய சூழலுக்கு ஏற்றவாறு இவ்வகை அகராதிகள் பெரும் நன்மைதரவல்லன. தமிழில் அனைத்தும் வெளிவரவேண்டும் என்னும் ஆர்வத்தின் வெளிப்பாடாக இத்தொகுப்பினை வெளியிடுவதில் தமிழ்ப் பல்கலைக்கழகம் பெரிதும் மகிழ்கிறது. தமிழகம் இதனை ஏற்றுப் போற்றி வரவேற்குமாக! நாள் : 8.3.2002 இடம் : தஞ்சாவூர் (இ. சுந்தரமூர்த்தி )