பக்கம்:மருத்துவக் கலைச் சொற்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இக்கலைச்சொல் தொகுப்பில் ஏறத்தாழ 8000 மூல மொழிச் சொற்களும் அதற்கு இணையாகத் தமிழில் பயன்படுத்தப்பெற்றுவந்த நிகரன்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இக்கலைச்சொல் தொகுப்பில் பல் தரப்பெற்ற கலைச் சொற்கள் காணக்கிடக்கின்றன. அவை ஒலியெர்ப்பு, எழுத்துப்பெயர்ப்பு, தமிழாக்கம், கடன்மொழிபெயர்ப்பு, கூட்டுச் சொற்கள், கலவைச்சொற்கள், தமிழ்ச் சொற்கள், படைப்புச் சொற்கள் என்பனவாகும். ஒலிபெயர்ப்புச் சொற்கள்: அயன் மொழிச் சொற்கள் அதன் ஒலிப்பின் அடிப்படையில் தமிழில் சொல்லாக்கம் செய்யப்படுகின்றன. இதனை ஒலிபெயர்ப்புச் சொற்கள் என அழைக்கிறோம். பொதுவாக இரு மொழிகளில் காணப்பெறும் ஒலிகள் முற்றிலும் மாறுபட்டு இருக்குமாயின் இதுபோன்ற சொற்கள் தோன்ற ஏதுவாகிறது. எ.கா. Protoplasm - புரோட்டோபிளாசம் Protein புரோட்டின் Ozone - ஓசோன் எழுத்துப் பெயர்ப்புச் சொற்கள்: அயன்' --மொழிச் சொற்களின் எழுத்துகளுக்கு , நிகராகத் தமிழ் எழுத்துகளைப் பெயர்ப்பது எழுத்துப் பெயர்ப்பாகும். பொதுவாக ஒத்த ஒலிகளையுடைய மொழிகளில் இவ்வகைச் சொற்கள் காணப்படுகின்றன. எ.கா. சீரணம் குதம் ரத்தம் Digestion Anus Blood தமிழாக்கம்: அயன் மொழிச் சொற்களைத் தமிழில் கடன் வாங்கும்போது 'தமிழ்மொழியின் மரபுக்கு ஏற்பச் சொற்களை மாற்றி அமைப்பது மொழியாக்கம் ஆகும். எ.கா. அச்சு Axis புரதம் Protein விரலி Vilus