பக்கம்:மருத்துவக் கலைச் சொற்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

Vi கடன் மொழிபெயர்ப்பு: இவ்வகையில் சொற்கள் கடன் . வாங்கப்படுவதில்லை. ஆனால், சொற்களுக்குப் பதிலாக அயன் மொழிச் சொற்கள் எந்தப் பொருளில் பயன்படுத்தப்படுகின்றனவோ, அந்தப் பொருள் அல்லது கருத்து கடன் வாங்கப் பெற்றுத் , தமிழ்ச் சொல்லாக வழங்கப்படுகிறது. எ.கா. நுண்ணோக்கி - Microscope நாடாப்புழு -' Tape worm கொக்கிப்புழு - Hock worm கூட்டுச் சொற்கள்: ஒன்றிற்கு மேற்பட்ட சொற்கள் கூட்டாகச் சேர்ந்து பொருள் உ.ணர்த்துகின்றன. இவ்வகைச் சொற்களும் இக் கலைச்சொல் பட்டியலில் உள்ளன. இவ்வகைச் சொற்களைக் கலைச்சொற்கள் என வகைப்படுத்தினாலும் வாக்கியத்தில் வரும்போது மட்டுமே அவை பொருள் உணர்த்துகின்றன. ஆனால் தரித்து நின்று பொருள் சுட்டுவதில்லை. எனவே இவ்வகைச் சொற்கள் குறிப்பிட்ட பொருளைச் சுட்டும் கலைச்சொல் எனக் கூற இயலாது. - எ.கா. நிறக்கோல் - - Chromosome சீழ்வடியும் துளைகள் - Sinuses உடல் முழுதும் மின்னல் வேகத்தில் தூக்கிப் போடுதல் - Ballism கலவைச் சொற்கள்: இரு மொழிச் சொற்கள் கூட்டுச் சொற்களாகப் பயன் படுத்தப்படுவதுண்டு. இவ்வகையான கூட்டுச் சொற்கள், ஆங்கிலம் தமிழ், தமிழ் - ஆங்கிலம் அல்லது வடமொழியுடன் கூடியனவாக அமையலாம். எ.கா, தைராய்டி.. தைராய்டு சுரப்பிக் கழலை - Thyroid tumour தளமியெடுப்பு -Thalameetomy பிளாஸ்மா உறை - Plasma Membrane